குறிப்பு: இது பலாபிசேகத்தையும் நெய் அபிசேகத்தையும் ஆதரித்து எழுதபட்டது இல்லை.
மூடநம்பிக்கையை பார்பனர்கள் மட்டும்தான் சொல்லி கொடுத்தார்கள் என்று சொல்லும் அறிவாளி தமிழர்கள் அதாவது நாத்திக ஹிந்துக்கள், அதாவது திராவிடர்கள் இந்த ஆடு கோழி வெட்டுவதை சிறு தெய்வ வழிபாடு என்று மட்டும் எப்படி ஏற்று கொள்கிறார்கள்?? ஆடு கோழி வெட்டுவது கலாச்சரம் பண்பாடு என்று சொல்லும் இவர்கள் எந்த உயிரையும் கொல்லாமல் பாலையும், அதில் இருந்து கிடைக்கும் நெய்யையும் வைத்து அபிசேகம் செய்வதை மட்டும் எப்படி மூட நம்பிக்கை என்கிறார்கள்? மூடநம்பிக்கை என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், மதங்களிலும் இருக்கிறது. தமிழன் என்று சொன்னால் அங்கே மூட நம்பிக்கை இல்லாமல் போய்விடுமா என்ன?
பிராமின்களின் ஆதிக்கமே இல்லாத இலங்கையில் இங்கே இருப்பதை விட மிக அதிகமாக, இந்து மதத்தை பின் பற்றுகிறார்கள், அங்கேயும் பாலாபிசேகமும், நெய் அபிசேகமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருக்கும் இந்த நாத்திக ஹிந்துக்கள் இதுவரை அவர்களுடன் இந்து மதம் என்பது தமிழர் பண்பாடு இல்லை என்று ஏன் சொல்லவில்லை? தமிழன் என்றால் எல்லா இடத்திலும் தமிழன் தானே? ஒரு வேலை இலங்கை தமிழர்கள் ஹிந்து தமிழர்கள் என்று சொல்வார்களோ?
தமிழன் என்பதற்காக அவர்களிடம் மூட நம்பிக்கை இல்லாமல் போய்விடுமோ? இவர்கள் உண்மையில் மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாக இருந்தால் இதை பண்பாடு கலாச்சாரம் என்று சொல்ல மாட்டார்கள் பாலாபிசேகம் செய்வதை விட இதுதான் கொடுமையான மூடநம்பிக்கை என்று ஒப்புகொள்வார்கள்
இந்த நாத்திக ஹிந்துக்களுக்கு பார்பனர்கள் என்ற ஜாதியை மட்டும்தான் எதிர்க்க வேண்டுமே தவிர தமிழனை ஒன்று சேர்க்கவோ அல்லது சிறு தெய்வ வழிபாட்டில் ஜாதி மத வேறுபாடின்றி தமிழனாக எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும், அங்கே ஜாதி இல்லாமல் மக்கள் ஒன்றாக இருந்து பூஜை செய்து உணவு உண்டு வாழ வேண்டும் என்று சொல்வதில்லியே ஏன்?
தமிழன் தமிழன் என்று மேடையில் முழங்கும் வைகோ, நெடுமாறன், ராமதாஸ், சீமான், வீரபாண்டியன், வீரமணி போன்றோர் பிறந்தஊர்களிலும் அதை சுற்றி உள்ள அனைத்து ஊர்களிலும் இன்னைக்கு கூட ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறதே, அதற்காக இவர்கள் இதுவரை என்ன செய்து இருக்கிறார்? தமிழன் என்று ஒரே இனம்தான் இங்கே ஜாதி இல்லை என்று ஒரு முன்னோடியாக அனைத்து ஜாதி மக்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்த வேண்டியதுதானே, இதை அவர்கள் பிறந்த ஊரிலேயே இதை செய்தால் ஒரு முன்னோடியாக இருக்குமல்லவா?
இதை இதுவரை யாராவது செய்து இருக்கிறார்களா? அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடி பகுத்தறிவு பகலவந்தான் செய்து இருக்கிறாரா? இந்த நாத்திக ஹிந்துக்கள் சொல்லும் இந்த பார்பன எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டில் இளைஞர்களை கெடுத்து குட்டி சுவராக்கும் வேலை, இதனால்த்தான் திராவிட கட்சிகள் இளைஞர்களுக்கு குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கி கொடுத்து அடியாட்களாக வைத்து கொண்டு இருக்கிறார்கள், குறிப்பாக தலித் இளைஞர்களை.
நான் இந்த குல தெய்வ வழிபாட்டில் மிக அதிக நம்பிக்கை உள்ளவன். ஏனென்றால் அது நம் முன்னோர் வழிபடு அனால் எப்படி பாலாபிசேகமும், நெய் அபிசேகமும் மூட நம்பிக்கையோ அது போல ஆடு வெட்டுவதும் கோழி வெட்டுவதும் மூட நம்பிக்கைதான், அந்த மூட நம்பிக்கையைத்தான் நானும் செய்து கொண்டு இருக்கிறேன்.
ஆனால் ஒரு உயிரை கொள்வது பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்வதை எப்படி ஏற்றுகொள்ள முடியும்?
ரொக்கெட்டே விண்வெளிக்கு அனுப்பினாலும் கீழே இரண்டு எலுமிச்சை பழம் வைத்து அனுப்புபவன்தான் உண்மையான தமிழன். விஞ்ஞானிகள் என்று தம்மை அழைப்பவர்கள் கூட தமது விஞ்ஞான அறிவுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல், மூட நம்பிக்கைச் சேற்றை தமது முகத்தில் பூசிக் கொள்கின்றார்கள் .
ReplyDeleteஅண்மையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக் சி.ஜி 820 புதிய ஹெலிகொப்டரை கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர் ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தபோது, புதிய வாகனங்களுக்குப் பூஜை போடும்போது சில்லுக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதுபோல ஹெலிகொப்டரின் கீழ் எலுமிச்சம் பழங்கள் வைத்து நசுக்கப்பட்டன.
புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராகப் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார். அதன்பின் ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன் தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்து ஜி.எஸ்.எல்.வி. பி 3 ரொக்கெட்டுக்கான திட்டத்தை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார். திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.
விண்வெளிக்கு ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.பி 3 ரொக்கெட்டோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்ததற்கு இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ரொக்கெட்டின் கிரையோஜெனிக் இயந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ரொக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துப் பயன் இல்லை என்று நேர்மையாக நாணயத்துடன் ஒப்புக்கொள்ளவில்லை.
நல்லையா தயாபரன்
சிறு தெய்வ வழிபாடு கூடாது, ஏன்?
ReplyDeleteசிறு தெய்வ வழிபாடு கூடாது என்றார் வள்ளலார் ! சித்தர்களும் ஞானிகளும் சிறு தெய்வங்களை வழி பட்டதே இல்லை!? சிறு தெய்வங்கள் எல்லாம் சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏவல் செய்யும் மெய்க்காப்பாளர்களே! ........ (read more)
http://sagakalvi.blogspot.in/2012/10/blog-post_27.html