Thursday, February 16, 2012

கருவேல மரமும் சாதீயமும்....

நம் மக்களிடையே சண்டை வந்தால் அடிக்கடி உபோயோகிக்கும் வார்த்தை "உன்னை வேரோடு வெட்டி சாய்க்கிறேன் பார்" சொல்கிறார்கள்? 

மரத்தின் மேல் பாகங்களையும் அடிமரத்தையும் வெட்டாமல், அதெப்படி கண்ணுக்கு தெரியாத வேரை முதலில் வெட்டி சாய்க்க முடியும்?

எங்க ஊர்ல அதிகமா இருக்கிறது வேலிகருவை மரம்தான் அதாங்க கருவேல மரம். இந்த மரத்தை வெட்டும் போது என்ன செய்வாங்க என்றால் முதலில் கிழே உள்ள முட்களுடன் கிளைகளை வெட்டி விட்டு சரி செய்து கொள்வார்கள், அப்புறம் அடி மரத்தை வெட்டுவார்கள், (எல்லா மரத்தையும் அப்படித்தானே வெட்டுவார்கள் இவன் என்னடா லூசு மாதிரி சொல்றான் என்று நினைக்க வேண்டாம்?)

நான் இந்த மரத்தை எடுத்துகாட்டாக சொல்வதற்கு நிறைய காரணங்கள், அதில் உள்ள முட்கள், அடி மரத்தில் முட்கள் இருக்காது கிளைகளில் முட்கள் இருக்கும் அந்த முட்கள் குத்தினால் ரண களமாகி விடும்,......... ஒரு சின்ன கிளை இருந்தால் கூட பல்கி பெருகிவிடும், இந்த மரத்தின் வேரை பிடுங்கி எரிவது சாதாரண காரியமில்லை, இந்த மரத்தின் வேர் மண்ணை கெடுத்து குட்டி சுவராக்கி விடும், இந்த மரம் அடுப்பெரிக்க தவிர வேறு எதுக்கும் பயன்படாது, விதை விழுந்து குட்டி குட்டியாய் மரங்கள் முளைக்க ஆரம்பித்துவிடும் தாய் மரத்தின் நிழலில்! எதை தின்றாலும் செரிக்கும் என் கோமாதாகளுக்கு கருவேல் மர விதை மட்டும் செரிக்காது, அந்த சாணியை உரமாக பயன்படுத்தும் போது வயலில் முளைத்து மண்டி விடும் அதை பறிக்க எவ்வளவு சிரமபடவேண்டி இருக்கும் தெரியுமா?

இங்கே இருக்கும் கருவேல் மரத்தில் முட்களுடன் இருக்கும் கிளைகள்தான் வர்னாசிராமம் என்கிற பார்பனநீய ஜாதீயம், அவைகள்தான் ஷத்திரிய, சூத்திர கூட்டங்கள், அடி மரம்தான் பிரமினர்கள், அதாவது முட்களுடன் கூடிய கிளைகளை தாங்கி பிடிப்பவர்கள், வேர்த் தான் பார்ப்பனீயம் என்கிற வர்ணாசிரம ஜாதீயம்.

வர்ணாசிரமம்/பார்பநீயம் என்ற அந்த வேருக்கு உயிர் கொடுத்து கொண்டு மண்ணை கெடுத்து கொண்டு இருப்பவர்கள் யார்? பிரமினர்களா? ஷத்ரியர்களா? சூத்திரர்களா?

எப்படி முட்களுடன் உள்ள கிளைகளை அடி மரத்தோடு வெட்டாமல் வேரை தோண்ட முடியும்? அடிமரத்தை மட்டுமே குற்றம் சொல்பவர்கள் ஏன் கிளைகளை வெட்ட முன் வருவதில்லை?

முள் இல்லாத அடிமரம் சும்மா இருக்கிறது ஆனால் முட்களுடன் இருக்கும் கிளைகள் முட்களை கீழே உதிர்த்தவண்ணம் இருக்கிரன்ற, அந்த கிளைகளை என்ன செய்யலாம்? என்று சொல்லுங்கள்?


No comments:

Post a Comment