13.12.1960- ‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம். இதில் இருந்து சில பகுதிகளும் அதில் இருந்து எழுந்த சில சந்தேகங்களும்..
"இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் கூட்டத்தில் இருந்து வருகின்றன. அவை: 1. “பிராமண” ஜாதி;, 2. “சூத்திர” ஜாதி. அதாவது மேல் ஜாதி; கீழ்ஜாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்த இரு ஜாதிகளின் அதாவது “பிராமண ஜாதி”, “சூத்திர ஜாதி” என்பதன் உட்பிரிவுகள் தானே அல்லாமல் – தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. உதாரணமாக “பிராமணரில்” அய்யர், அய்யங்கார், ராவ், ஆச்சாரி, சாஸ்திரி என்பவர்கள் எல்லாரும் பிராமணன் என்கின்ற ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். இவர்களுக்கு “இந்து” சாஸ்திரங்களிலும் “இந்து” சட்டங்களிலும் ஒரே அந்தஸ்துதானே ஒழிய தனித்தனி உயர்வு தாழ்வு அந்தஸ்து கிடையாது.
அதுபோலவே “சூத்திரன்”களிலும் வேளாளன், படையாச்சி, நாயக்கன், செட்டி, ஆசாரி, நாடான், வண்ணான், நாவிதன், குயவன், செம்படவன், பள்ளன், பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் பிரிவுகளும் மற்றும் முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர், கள்ளர், மறவர், உடையார், அகமுடையார், தேவாங்கர், செங்குந்தர் முதலிய பிரிவுகளும், பட்டங்களும் எல்லாம் “சூத்திர” ஜாதியின் உட்பிரிவுகளே தவிர, பிறவி ஜாதிகளில் சேர்ந்தவை அல்ல.
மற்றும் ஒரு பிரிவினுள் பல உட்பிரிவுகளும் உண்டு. இவை பெரிதும் உழைப்பு, தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட கோஷ்டிகள் பற்றி ஏற்பட்ட பிரிவுகளே அல்லாமல் புழங்குவதற்கு கொள்வினை கொடுப்பனை செய்ததற்குச் சட்டத்தால் – சாத்திரங்களால் தடையும் தனித்தனி நீதி – நியமமும், ஆசார – அனுஷ்டானமும் ஏற்படுத்தப்பட்ட ஜாதிகள் அல்ல/"
ஏற்றுகொள்ள வேண்டிய கருத்துக்கள் தான். ஆனால் இவரின் இந்த கருத்தை இவரின் பிள்ளைகளும் பேரன்களும் எற்றுகொண்டு இருக்கிறார்களா?
அப்படி ஏற்றுக்கொண்டு, ஜாதி, சம்பிராதாயம், ஆசார-அனுஷ்ட்டானமும் பார்க்காமல், திராவிட கழகத்தில் நடை பெற்ற பள்ளர்-பறையர்-மறவர்-சக்கிலியர்-வன்னியர்-குயவர்-கோனார்-செட்டியார் மற்றும் உள்ள ஜாதிகளில் நடை பெற்ற கலப்பு திருமணங்கள் எத்தனை?
//காமராசர் ஆட்சி நமக்குக் கொடுத்து வரும் சஞ்சீவி மாத்திரையான கல்வி – உத்தியோகம் – பதவி ஆகிய காரியங்களால் எந்த ஜாதிக்கு ஆபத்தோ -கேடு காலமோ ஏற்படுமோ அந்த ஜாதிதானே எதிர்க்க வேண்டும்? எதிர்த்துத் தீரவேண்டும்? அப்படிப்பட்ட ஜாதிதானே இன்று எதிர்ப்பதோடு காமராசரையே கவிழ்க்க வேண்டும் என்று பாடுபடுகிறது. இது ஒன்றே போதுமே எப்படிப்பட்ட மூடசிகாமணியும் காமராசர் ஆட்சியால் ஜாதி ஒழிவதற்குக் கல்நடு விழா நடத்திக் கட்டடம் துவக்கப்பட்டு விட்டது” என்பதை உணர்ந்து கொள்ள முடியுமே! இதைப் பார்த்த மற்றத் தமிழன் இந்தக் கட்டடம் பலமாகக் கட்டப்படவும், சீக்கிரம் முடிவு பெறவும் பாடுபடுவதுதான் அவனது பிறப்பை உயர்த்திக் காட்டும் சின்னம் ஆகுமே தவிர, எதிர்ப்பது, கவிழ்க்கப் பார்ப்பது எதைக் காட்டும் என்பதை நீயே யோசனை செய்துபார்.ஆகவே என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை ஆனால்,முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு!இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காரியங்களை உடல் – பொருள் – ஆவியைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்//
பிரமினர்கள் எதிரிகள்தான், ஆனால் இந்த ஜாதி ஹிந்துக்கள், இவர் சொல்லும் திராவிடர்கள் துரோகிகள்தானே, அந்த துரோகிகளை எதிர்த்து இவரோ இவரின் கூட்டமோ இதுவரை என்ன செய்து இருக்கிறார்கள்?
காமராஜரை கவிழ்த்தது எந்த பிராமின கூட்டம்? திமுக அண்ணா மற்றும் கருணாநிதி என்ற நாத்தீக ஹிந்து கூட்டமா அல்லது காங்கிரஸ் கூட்டமா அல்லது அப்போது இல்லாத பிஜேபி பிராமின கூட்டமா? இவர் யாருக்காக புரட்சி செய்தார்? திராவிடருக்கா ஆதி திராவிடருக்கா? இவர் ஏன் ஆதிதிராவிட இயக்கம் ஆரம்பிக்கவில்லை?
இங்கே தமிழ்நாட்டில் நடைபெறும் ஜாதி வெறி கூட்டங்களுக்கு யார் அதரவு அழித்துக்கொண்டு இருப்பது? பெரியாரின் பிள்ளைகளும் பேரன்களும்தானே, அப்படி இருக்க இவரை பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் யார்? எதற்காக அவர்கள் திராவிடமும் தமிழ் தேசியமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்?
பெரியாரை பின்பற்றுகிற இந்த அறிவு ஜீவி கவுண்டர் கவுண்டர் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வது ஏன்? அந்த ஜாதியை பற்றி சினிமா படம் எடுக்கும் போது "ஜாதி பெயர் வைத்த படத்தில் நடிக்க மாட்டேன், ஜாதி பெரியாருக்கு எதிரானது" என்று சொல்லி எதிர்க்காமல் ஏன் அந்த படங்களில் நடித்தார்?
இந்த வீரமணி அவர்கள் கொஞ்ச நாள் ஜெயாவை அன்புசகோதரி என்று சொல்லி ஜால்ரா போட்டார், இப்போது பார்பன எதிர்ப்பு பேசி, பிஜேபியுடன் கூட்டுவைத்து கொள்ளை அடித்த இந்த கும்பலுக்கும், திராவிடன், தமிழன், என்று மேடையில் முழங்கி விட்டு ஆதிக்க ஜாதிகளுக்கு ஜால்ரா போட்டுகொண்டு ஜாதி அரசியல் நடத்தும் கருணாநிதிக்கு இந்த வீரமணி ஜால்ரா போட்டுக்கொண்டும், கூஜா தூக்கி கொண்டும் இருப்பது ஏன்?
இவர்களின் கொள்கைகள்தான் என்ன? இவர்கள் இதுவரை பெரியாரை பின்பற்றி ஜாதி ஒழிப்புக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும் செய்தது என்ன?
யாருக்கவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்!!!
No comments:
Post a Comment