Sunday, February 5, 2012

ஆதிதிராவிட/திராவிட......................

தமிழ்நாட்டில் ரெண்டு குழுக்கள் இருக்கின்ற ஒன்று திராவிடர்கள் மற்றொன்று ஆதிதிராவிடர்கள். இதில் ஆதி திராவிடர்கள் என்பவர்கள் திராவிடர்களுக்கு முன்னமே இந்த மண்ணில் வாழ்ந்த ஆதி குடிகள், ஆதி தமிழர்கள், தொல் தமிழர்கள், தொல்குடிகள் என்று எப்படி வேண்டுமானலும் வைத்து கொள்ளலாம் அல்லவா?

தமிழ்நாட்டில் திராவிட கலாசாரம் என்பது ஆதிதிராவிட கலாச்சாரத்தை பின்பற்றி வந்துதானே இருக்கிறது. பண்பாடு, கலாச்சாரம் என்பது ஆதிதிராவிடர்களிடம் இருந்து வந்ததுதானே இப்போதைய தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும். 

இப்படி இருக்கும் போது, பெரியாரும் அவருடன் சேர்ந்தது திராவிட இயக்கம் ஆரம்பித்தவ்ர்களும் ஏன் அதற்கு "திராவிட இயக்கம்" என்று பெயர் வைக்க வேண்டும்? (பண்டிதரின் கருத்துக்களை கொள்ளை அடித்து ஆரம்பிக்க பட்ட கழகம்) "ஆதிதிராவிட இயக்கம்" என்று அல்லவா வைத்து இருக்க வேண்டும். ஏன் வைக்கவில்லை? ஆதிதிராவிட கலாச்சாரத்தை அல்லவா போற்றி பாதுகாக்க வேண்டும். ஆதிதிராவிட கலாச்சாரத்தை அல்லவா முன்னிறுத்தி போராடி இருக்க வேண்டும். 

இவர்கள் சொல்லும் ஆரியர் படையெடுப்பினால் அழிக்கப்பட்டது ஆதிதிராவிட கலாசாரம்தானே அப்புறம் ஏன் மூச்சுக்கு முன்னூறு தடவை திராவிட கலாச்சாரம் திராவிட கலாச்சாரம் என்று புலம்புகிறார்கள்? ஆதிதிராவிட கலாச்சாரம் என்றல்லவா புலம்பவேண்டும்? 

உண்மையில் ஆரியர் படையெடுப்பு நடந்து இருந்தால் அங்கே அழிக்கப்பட்டது ஆதிதிராவிட கலாசாரம்தனே திராவிட கலாச்சாரம் இல்லியே, அப்படி இருக்கும் போது இவர்கள் ஏன் திராவிட கலாச்சாரம், தமிழர் கலாச்சாரம் என்று சொல்கிறார்கள். 

ஆதிதிராவிட கலாச்சாரத்தில் இருந்து உருவான வள்ளுவன் வேண்டும், இளங்கோ வேண்டும்... பண்டிதன் அயோத்திதாசன் வேண்டும் ஆனால் ஆதிதிராவிட கலாச்சாரம் வேண்டாம். 

ஆதிதிராவிடர்களின் எச்சிலை தின்று வந்த கலாச்சாரம் திராவிட கலாச்சாரம் ஆனால் அதை முதன்மை படுத்தி, எங்களை தனிமை படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஆதிதிராவிடர்கள் ஆண்ட பரம்பரைகள் எல்லாம் திராவிடர்கள் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு திரிகிறார்கள் அதற்க்கு ஆதிதிராவிடர்களிலும் பல பேர் ஜால்ரா தட்டுகிறார்கள். 

No comments:

Post a Comment